இயக்குநர் அமீரின் தாய் உயிரிழந்தார் - திரையுலகினர் அதிர்ச்சி

By Nandhini Jul 12, 2022 08:27 AM GMT
Report

இயக்குநர் அமீர்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் இயக்குநர் அமீர். மதுரையில் பிறந்த இவர் கடந்த 2002ம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தமிழ் திரைப்படவுலகிற்கு காலெடியெடுத்து வைத்தார்.

வெற்றி படங்கள் 

‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தை இயக்கிய அமீர், இதனையடுத்து, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் அமீர்.

அமீர் தாய் உயிரிழந்தார்

இந்நிலையில், இயக்குநர் அமீரின் அம்மா பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் தமிழ் சினிமாத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த அமீரின் அம்மாவிற்கு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

Ameer-Sultan

பிரபல நடிகர் ராம்ராஜ் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி