பிரபல நடிகர் ராம்ராஜ் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் ராம்ராஜ்
'அவன் இவன்' படத்தில் நடித்த நடிகர் ராமராஜ் உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 72 வயதான நடிகர் ராம்ராஜ் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
இதனையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் ராம்ராஜின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும்இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இறுதி அஞ்சலி
இவரது உடல் அவரது சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்கு பின்னர், இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் - கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது!