தமிழக வெற்றிக் கழகம்; விஜயுடன் இணைந்து நிச்சயம் அரசியல் செய்வேன் - இயக்குநர் அமீர் உறுதி!
விஜயுடன் இணைந்து அரசியல் செய்ய நான் தயார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வளம் வருபவர் அமீர். இவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமீர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது என்ற அவர், இந்த வழக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமீர், அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். மேலும் தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்றும் தன்னுடைய உள்ளுணர்வும் அதையேதான் சொல்கிறது.இன்றி கூறினார்.
விஜயுடன் இணைந்து
பிறகு, அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, பதில் அளித்த அமீர், திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும் என்றார். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் என்றும் திராவிடம் என்பது நம்முடைய மண்,
ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. இதனால் அனைவரும் திராவிடர்கள் தான் என்றும் திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல். தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமீர்,
சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக உள்ளது என்றார்.மேலும், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்களை கூறியதாகவும், அவர் தன்னை அழைத்தால் நிச்சயம் அவருடன் அரசியலில் பயணிப்பேன்.
விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே கூறியுள்ளதால் இருவருடன் சேர்ந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.