இரவில் அழைத்த பிரபல நடிகை.. நான் பாத்துக்குறேன், காப்பாற்றிய தனுஷ் - இயக்குனர் ஓபன் டாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகை இயக்குனரை இரவு 10 மணிக்கு அழைத்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குனர் அமீர்
பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அமீர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பிறகு ராம், கிராமத்து மண்வாசனை ததும்ப கொலை, கொள்ளை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அமீர் ஒரு மேடையில் தனக்கு ஆங்கிலம் தெரியாததால் தான் பட்ட வேதனையை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார்.
அமீர் பேட்டி
இந்நிலையில், அவர் கூறுகையில், "நைட் 10 மணி அளவில் ஒரு முன்னணி பெரிய நடிகை அமீருக்கு போன் செய்தார். அவர் முழுவதும் ஆங்கிலத்தில் பேசினார், அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கால் யூ லேட்டர் என்று சொல்லி கட் செய்தேன். பிறகு படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு சென்றேன்.
அதே விமானத்தில் தனுஷும் உடன் ஒரு நடிகையும் இருந்தார். அவரை பார்த்ததுமே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன். ஆனால் தனுஷ் வந்து பேசினார், தாடி மீசையுடன் இருந்ததனால் நான் தான் அமீர் என்று அந்த நடிகைக்கு தெரியவில்லை, தனுஷ் சொன்ன பிறகுதான் தெரிந்தது.
உடனே அவர் டென்ஷனில் அன்று போன் பண்ணால் பேசமுடியாதுனு கட் பண்ணிவிட்டார் என்றார். பிறகுதான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்ற உண்மையை தனுஷ் அந்த நடிகையிடம் சொல்லி நிலைமையை புரியவைத்தார்" என்று கூறியுள்ளார்.