கார் எதற்கு? - வெல்பவர்களுக்கு அரசு பணி..! தமிழ்நாடு அரசிற்கு அமீர் கோரிக்கை.!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK Ameer Sultan
By Karthick Jan 18, 2024 05:05 AM GMT
Report

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் முன்வைக்கும் அரசுப் பணியை வழங்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.

அமீர் கடிதம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

director-ameer-request-to-tn-govt-in-jallikattu

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

அரசுப்பணி

மேலும், இன்று(17-01-2024) மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

ஐ.பி.எல் போல ஜல்லிக்கட்டு விளையாட்டு...! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்..!

ஐ.பி.எல் போல ஜல்லிக்கட்டு விளையாட்டு...! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்..!

இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

director-ameer-request-to-tn-govt-in-jallikattu

நேற்று தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூட தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, இந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் உரிய முடிவினை எடுப்பார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.