265 மில்லியன் வருஷம் பழமை; டைனோசருக்கு முன்பேவா.. கொடூர விலங்கின் மண்டையோடு கண்டுபிடிப்பு!
டைனோசர்களுக்கு முன்பே வாழ்ந்த விலங்கின் மண்டையோடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பஃபோனஸ் பிக்சை
தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் சுமார் 265 மில்லியன் வருடப் பழமையான பாம்பஃபோனஸ் பிக்சை உயிரினத்தின் புதைபடிமங்கள் மற்றும் மண்டை ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விலங்கினம் சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு தென் அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த மிகப் பெரிய மற்றும் ஆபத்தான விலங்காக கருதப்படுகிறது.
மண்டையோடு கண்டுப்பிடிப்பு
இந்த மிருகத்தின் புதைபடிமங்களில் ஒரு மண்டையோடு மற்றும் கால், கை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டைனோசிபாலியர்கள் வகையில் ஒரு இனம்தான் பாம்பஃபோனஸ் பிக்சை.
இவை பிரேசில் பகுதியில் வாழ்ந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு, இதுவரை கண்டறிந்த புதைப்படிமங்களில் மிகப் பெரியதாகும்.
இதன் மூலம் இந்த குறிப்பிட்ட மிருகத்தைப் பற்றித் தெளிவான ஆய்வை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
80 சதவீத உயிரினங்கள் அழிந்த நிகழ்வில் இதுவும் வேரோடு அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.