15 கோடி ஆண்டு பழமை; டைனோசர் எலும்புக்கூடு - ஏலத்திற்கு விடும் நிறுவனம்!
15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு ஏலத்திற்கு வரவுள்ளது.
டைனோசர் எலும்புக்கூடு
நியூயார்க்கில் உள்ள சவுத்பே ஏல நிறுவனம், பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை ஏலத்துக்கு விடுவது வழக்கம்.
அந்த வகையில், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கூறப்படும் சிறிய டைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும், சகாரா பாலைவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து விழுந்த விண்கல்லும் ஏலம் விடப்படவுள்ளன.
விரைவில் ஏலம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுத்பே ஏல நிறுவனத்தின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹத்தான், ஏலம் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு உலகில் தோன்றிய நான்கு டைனோசர்களில் ஒன்று.
மீதமுள்ள மூன்று அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படவுள்ள செவ்வாய் கிரகத்தின் விண்கல் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மிகப்பெரிய செவ்வாய் கிரகத்தின் கல் என்று தெரிவித்துள்ளார்.