இனி விசா வேண்டாம் - 76 நாடுகளுக்கு அனுமதி வழங்கிய நாடு!

Sri Lanka China India
By Sumathi Jul 09, 2025 12:45 PM GMT
Report

விசா தேவையில்லை என்ற திட்டத்தை, 76 நாடுகளுக்கு சீனா விரிவுபடுத்தியுள்ளது.

விசா வேண்டாம்

சீனாவில், கொரோனா காலத்தின்போது, வெளிநாட்டு பயணியர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த, 2023ல் இது தளர்த்தப்பட்டபோதும், சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கவில்லை.

china

இதையடுத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியருக்கு, விசா வழங்குவதில் அரசு சலுகைகளை அறிவித்தது. அதன்படி, 30 நாட்களுக்கு விசா இல்லாமல் சீனாவில் சுற்றிப் பார்க்கலாம். 2023 டிசம்பரில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளுக்கு முதலில் இந்த சலுகை வழங்கப்பட்டது.

தனி தீவை வாங்கிய இந்தியர்; புதிய நாடு உருவாக்கத் திட்டம் - யார் தெரியுமா?

தனி தீவை வாங்கிய இந்தியர்; புதிய நாடு உருவாக்கத் திட்டம் - யார் தெரியுமா?

சீனா அறிவிப்பு

தற்போது அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், டிஜிபூட்டி, டொமினிகா, எத்தியோப்பியா, பிஜி, கிரெனடா, கினியா-பிசாவ், ஹைட்டி, இந்தோனேசியா, கினியா, கஸாரி, ஜமைக்கா லாவோஸ், மக்காவ் (SAR சீனா), மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள்,

visa

மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மங்கோலியா, மொன்செராட், மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நேபாளம், நியு, பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் லூசியா,

செயின்ட் லூயிஸ் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாடு மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை அடங்கும்.