ஆறு மாதத்திற்கு கெட்டு போகாத இட்லி மிளகாய்ப் பொடி செய்வது எப்படி?
தமிழகத்தில் பெரும்பாலும் காலை உணவாக பலரும் இட்லி பயன்படுத்தப்படுகிறது. இந்த இட்லிக்கு துனை உணவாக சாம்பார், சட்னி, என பலவகை உணவுகள் பயன்படுகிறது. அதிலும் சிலர் இட்லி பொடி சேர்த்தும் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இட்லி பொடி பிரியர்களுக்கு இட்லி மிளகாய்பொடி கூடுதல் சுவை கொடுக்கும். இந்த இட்லி மிளகாய்பொடி தயார் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு – 2 கைபிடி அளவு
வரமிளகாய் – 10
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடலைப்பருப்பு, வரமிளகாய், ஆகிய பொருட்களை தனித்தனியாகவும், உளுத்தம் பருப்பை பெருங்காயம் சேர்த்தும் வறுத்து ஒன்றாக கலந்து தேவைக்கேற்ப மிக்ஸியில் போட்டு
பாதி பதமாக அரைத்தால் சுவையான இட்லி மிளகாய்பொடி தயார். இதில் தோவை என்றால் வெள்ளை அல்லது கருப்பு எள்ளு மற்றும் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இட்லி மிளகாய்
பொடியை ஆறு மாதம் வைத்து பயன்படுத்தலாம்.