மக்களே அபாயம்! பரவும் டிங்கா டிங்கா வைரஸ்.. தாக்கியதில் நடனமாடும் பெண் - viral video!
டிங்கா டிங்கா எனும் வைரஸ் பரவி வருகிறது.
டிங்கா டிங்கா வைரஸ்..
உகாண்டாவின், புண்டிபுக்யோ மாவட்டத்தில் ஒரு அறிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கும் போது கூட,
நடனமாடிக் கொண்டே இருப்பது போல, உடல் நடுங்குவதால், இந்த தொற்று நோயிற்கு 'டிங்கா டிங்கா வைரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிகப்படியான உடல் நடுக்கமும் காய்ச்சலும் முக்கிய அறிகுறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுவரை இந்த வைரஸால் 300 பேர் பாதிக்கப்பட்டதாக தெறிகிறது. எனினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம்,
நடனமாடும்..
நோயாளிகள் ஒரு வாரத்தில் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள், உகாண்டாவின் சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, தொற்றுக்கான காரணம் குறித்து தீவிரமாக மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்..
எங்கிருந்து பரவ ஆரம்பித்தது என்பது குறித்தும் இன்னும் மர்மமாக உள்ளது. இந்த சூழலில், டிங்கா டிங்கா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிலர், உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்காது. இது, வெளியில் இருந்து பார்ப்பதற்கு அவர்கள் நடனம் ஆடுவது போல இருக்கும். இதன் காரணமாக பலர் நடக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
યુગાન્ડામાં ફેલાયો 'ડિંગા ડિંગા' વાયરસ
— Dhruv Sanchaniya (@DhruvSanchania) December 19, 2024
ચેપ લગતા જ તાવની સાથે વ્યક્તિ નાચવા માંડે
300થી વધુ કેસ
.
.
VC : @thetatvaindia #NEWS #Uganda #virus #dingadinga pic.twitter.com/uaklVw48OQ