பும்ராவை உடனே நீக்குங்க.. இந்திய அணியை எச்சரித்த தினேஷ் கார்த்திக் - என்ன காரணம்?

Jasprit Bumrah Indian Cricket Team Dinesh Karthik New Zealand Cricket Team
By Swetha Oct 28, 2024 05:00 PM GMT
Report

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுவரை இரண்டு மேட்ச் நடந்த முடிந்துள்ளது.

பும்ராவை உடனே நீக்குங்க.. இந்திய அணியை எச்சரித்த தினேஷ் கார்த்திக் - என்ன காரணம்? | Dineshkarthick Ask Indian Team To Give Bumrah Rest

அந்த இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இனிவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் தோல்வி அடைந்தால் இந்திய மண்ணில் "ஒயிட் வாஷ்" தோல்வியை பெற வேண்டிய மோசமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

ஏனினும், இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான பும்ராவை உடனே அணியில் இருந்து நீக்கி அவருக்கு ஓய்வு அளிக்குமாறு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் பும்ரா கடந்த வாரம் வங்கதேச டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் விளையாடினார்.

கம்பீர் சொல்றதுக்கு ரோஹித் தலையாட்டக் கூடாது; அது தப்பு - சஞ்சய் விளாசல்!

கம்பீர் சொல்றதுக்கு ரோஹித் தலையாட்டக் கூடாது; அது தப்பு - சஞ்சய் விளாசல்!

என்ன காரணம்?

அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகள் விளையாடினார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.

பும்ராவை உடனே நீக்குங்க.. இந்திய அணியை எச்சரித்த தினேஷ் கார்த்திக் - என்ன காரணம்? | Dineshkarthick Ask Indian Team To Give Bumrah Rest

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "பும்ராவுக்கு நிச்சயம் ஓய்வு அளிக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடந்தே ஆக வேண்டும். முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும்.

வேறு யாருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. மற்றபடி இரண்டாவது போட்டியில் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களும் மூன்றாவது போட்டியிலும் ஆட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.