ரச்சிதாவை தப்பா வழி நடத்துறாங்க; அவளுடைய கேரக்டர் ஒரு மாதிரி.. புலம்பும் தினேஷ் பெற்றோர்!
ரச்சிதா குறித்து தினேஷ் பெற்றோர்கள் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
ரச்சிதா
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவர் சக நடிகரான தினேஷை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தினேஷ் தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் தினேஷின் பெற்றோர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “ ரச்சிதாவை நாங்கள் ஒரு குறை கூட சொல்ல மாட்டோம்.
தினேஷ் தாய் வேதனை
அவளுடைய கேரக்டர் ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட, அவர் தற்போது தவறான வழி நடத்துதலின் கீழ் இருக்கிறார். அதை சில பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தினேஷும் ரச்சிதாவும், தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். இது எத்தனை நாளுக்கு இருக்கும் என்பதை தெரியவில்லை.
ரச்சிதாவின் உறவினர்கள் எல்லோருமே மிகவும் அருமையான நபர்கள். சில நபர்களை தவிர.. தற்போது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்து இருக்கிறார்கள். வருவது வரட்டும். தினேஷ் உண்மையில் மிகவும் தெளிவான ஆள். உண்மையில் ரச்சிதாவும் இவ்வளவு நாள் பிரிந்து இருக்க மாட்டாள்.
ஆனால் எதனால் அப்படி இருக்கிறாள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
அவளைப்பற்றி எந்த மாதிரியான செய்தி வந்தாலும், நாங்கள் உறுதியாக சொல்கிறோம்; அவள் அந்த மாதிரியான பெண் கிடையாது. தற்போது அவர் வெளியே நடந்து கொண்டிருப்பது போல ஒரு நாளும் அவர் எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டதே கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.