அவரை அணியில் இருந்து நீக்குங்க - இந்திய அணியை எச்சரித்த தினேஷ் கார்த்திக்!
பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
நியூசிலாந்து தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு?
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், "பும்ராவுக்கு நிச்சயம் ஓய்வு அளிக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடந்தே ஆக வேண்டும்.
முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும். வேறு யாருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
மற்றபடி இரண்டாவது போட்டியில் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களும் மூன்றாவது போட்டியிலும் ஆட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.