கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தினேஷ் கார்த்திக்..?

Royal Challengers Bangalore Indian Cricket Team Dinesh Karthik
By Karthick Mar 08, 2024 03:43 AM GMT
Report

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெரும் திட்டத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக்

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், இந்தியா அணிக்காக, 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் அறிமுகமாகினார்.

dinesh-karthik-to-retire-from-cricket-

தொடர்ந்து டெஸ்ட், டி20 வகை போட்டிகளை என தொடர்ந்து விளையாடிய அவர் இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் 56 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் 1025 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 1752 ரன்களும், டி20 போட்டிகளில் 672 ரன்களும் எடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்; அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன நடந்தது?

காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்; அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன நடந்தது?

ஓய்வு 

ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, குஜராத், பெங்களூர் அணிகளுக்காக விளையாடிய தினேஷ்கார்த்திக் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்கு பின்பாக தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

dinesh-karthik-to-retire-from-cricket-

சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு என அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வினை முறையாக தொடர் முடிந்த பிறகு அறிவிப்பார் என கூறப்படுகிறது.