தோனியை நீக்கியது என் பெரிய தப்பு - பகிரங்க மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
தோனியின் பெயரைச் சேர்க்காமல் தவறு செய்துவிட்டதாக தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிளேயிங் அணி
கடந்த சுதந்திர தினத்தின்போது, இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், தனது ஆல்-டைம் இந்தியா பிளேயிங் அணியைத் தேர்வு செய்திருந்தார். அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
இதனை அறிந்த ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் தனிப்பட்ட வெறுப்பால் தோனியின் பெயரை சிறந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் சேர்க்கவில்லை என விமர்சனம் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. தற்போது அதற்கு விளக்கமளித்துள்ள தினேஷ் கார்த்திக்,
"நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையிலேயே அது தவறுதலாக நடந்த ஒரு விஷயம்தான். நான் பேசியது வீடியோவாக வெளிவந்த பின்னரே நான் அதை உணர்ந்தேன். நான் அந்த 11 வீரர்களை தேர்வு செய்யும்போது பல விஷயங்களை யோசித்தேன்.
தினேஷ் கார்த்திக் வருத்தம்
ஆனால், ஒரு விக்கெட் கீப்பரைச் சேர்க்க மறந்துவிட்டேன். அந்த அணியில் ராகுல் டிராவிட்டை பகுதிநேர விக்கெட் கீப்பராக நான் சேர்த்ததாக சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உண்மையில் நான் அவரை விக்கெட் கீப்பராகச் சேர்க்கவில்லை. நான் விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.
இது மிகப் பெரிய தவறு. என்னைப் பொறுத்தவரை தோனி எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் இடம்பெறக் கூடியவர். அது இந்திய அணி என்று இல்லை. கிரிக்கெட் ஆடியதிலேயே மிகப்பெரிய ஒரு ஜாம்பவான் அவர்.
அந்த அணியை நான் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஏழாம் வரிசையில் தோனியின் பெயரைச் சேர்ப்பேன். அவர்தான் அந்த அணியின் கேப்டனாகவும் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.