உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 பேர் முக்கியமான காரணம் - ரோஹித் சர்மா அதிரடி
டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேசிய தகவல் கவனம் பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை
மும்பையில் சியாட் விருது விழா நடைபெற்றது. அதில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
அதன்பின் பேசிய அவர், வெற்றி, தோல்வி, முடிவுகள், ஸ்டாட்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்காமல் விளையாடக் கூடிய வகையில் இந்திய அணியை மாற்றியது என் கனவு என்றே சொல்ல வேண்டும். டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கும், இந்திய அணியின் மனநிலையை மாற்றியதற்கும் 3 பேர் எனக்கு ஆதரவாக இருந்தனர்.
ரோகித் பேச்சு
அது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான். ஏனென்றால் அவர்கள் இல்லாமல் என்னால் தனியாக எந்த முடிவையும் எடுத்திருக்க முடியாது. டி20 உலகக்கோப்பையுடன் இந்தியாவில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
அந்த மகிழ்ச்சியை என்னால் இப்போதும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது. நிச்சயம் சவால் நிறைந்த பயணமாக இருக்கும். ஒரு முறை கோப்பையை வென்றுவிட்டால், அடுத்தடுத்து பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசை வரும்.
நான் மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்கள் அப்படியான மனநிலையில் தான் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
