இப்போ தான் ஓய்வை அறிவித்தார் - பயிற்சியாளராக நியமித்த RCB அணி

Royal Challengers Bangalore Dinesh Karthik
By Karthikraja Jul 01, 2024 08:11 AM GMT
Report

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் 2004 ம் ஆண்டு முதல் இந்தியா கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். மேலும் ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிக்காக விளையாடி வந்தார். 

dinesh karthik

அதன் பின் 2022 முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2024 ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த பின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறீர்களா? பதிலளித்த கம்பீர்

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறீர்களா? பதிலளித்த கம்பீர்

ஆர்.சி.பி

தற்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக்கை நியமனம் செய்ததாக ஆர்.சி.பி அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், "எங்கள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகை மீண்டும் அணிக்கு அழைக்கிறோம். ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருப்பார். கிரிக்கெட்டில் இருந்து இவரை பிரிக்கலாம். ஆனால், இவரிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அவர் எங்கள் அணியின் 12 வது படை வீரராக இருப்பார்" என கூறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒரு ஜாம்பவானாக அறியப்படும் தினேஷ் கார்த்திக், 17 தொடர்களில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 257 போட்டிகளில் களம் கண்டுள்ள தினேஷ் கார்த்திக், 22 அரைசதங்களுடன் 135.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,842 ரன்களை சேர்த்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 145 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங்களையும் மேற்கொண்டுள்ளார்.