ரிஷப் பண்ட் இதில்...பிஸ்தா பிளேயர்லாம் இல்ல - சாடிய ஹர்பஜன் சிங்!
ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஆசியக் கோப்பை முதல் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை, பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தினாலும் தினேஷ் கார்த்திக்கிற்குப் பதில் ரிஷப் பண்ட்தான் இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ரிஷப் பண்ட் சந்தேகமேயில்லாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய பிஸ்தா பிளேயர்தான் ஒப்புக் கொள்கிறேன். இதில் அவர் உண்மையில் நன்றாகா ஆடுகிறார்,
ரிஷப் பண்ட்-பிஸ்தா பிளேயர்
ஆனால் குறுகிய 20 ஓவர் போட்டியில் அவர் ஒரு நிறைவான வீரராக இல்லை. தினேஷ் கார்த்திக்கை எடுத்துக் கொண்டால் அவரது ரன் வரைபடம் மேல் நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.அவர் நன்றாக ஆடிவருகிறார்.
எனவே அவரை அணியில் எடுத்ததுதான் சரியான முடிவு. இந்த பார்மேட்டில் தினேஷ் கார்த்திக் இருக்கும் பார்முக்கு அவரை உட்கார வைப்பது நியாயமாகாது. தினேஷ் கார்த்திக் ஆட இதுதான் சரியான நேரம், அவர் ஆட வேண்டும்.
சிம்ம சொப்பனம்
ரிஷப் பண்ட் இளவயதுதான், இன்னும் கால நேர, அவகாசம் உள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு அதிகம் போனால் இன்னும் 1-2 ஆண்டுகள்தான். இந்திய அணியும் கார்த்திக்கின் பார்மை நன்றாகப் பயன்படுத்தி அதிகம் அவரிடமிருந்து பெற வேண்டும்.
பின்னால் களமிறங்கி தினேஷ் கார்த்திக்கினால் நிறைய போட்டிகளை வெல்ல முடியும். தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவும் பின்னால் ஜோடி சேர்ந்தால் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனம்தான் என தெரிவித்துள்ளார்.