பொய்ய அள்ளித் தெளிக்கிறிங்களே... பிரபல நடிகையை வெளுத்துவாங்கிய ரிஷப் பண்ட்!
பிரபல நடிகையின் ஸ்டேட்மெண்ட் குறித்து கடுப்பான ரிஷப் பண்ட் அவருக்கு பதிலடி கொடுத்துள்ள சம்பவம் வேகமாக பரவி வருகிறது.
ஊர்வசி ரவுட்டேலா
பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தை பெற்றவர் இவர். சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

2018ம் ஆண்டே ரிஷப்பண்டும், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையே காதலென கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வருவதாக கூறப்பட்டது. பின்னர் ஊர்வசி நம்பரை ரிஷப்பண்ட் வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.
ரிஷப் பண்ட்
அதற்குப்பின் இந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. இந்நிலையில் ஊர்வசிகொடுத்த ஒரு நேர்காணல் மீண்டும் இந்தப்பிரச்னையை கிளப்பியுள்ளது. சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் பேசிய ஊர்வசி, எனக்காக ஒருவர் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார் என்றார்.
Rishabh Pant Insta story #RishabhPant pic.twitter.com/x6W8rKVGpO
— Cricket (@CricketByRaj) August 11, 2022
மேலும் யார் அது எனக்குறிப்பிடாத ஊர்வசி, “RP'' எனக்குறிப்பிட்டு சொன்னார். ரிஷப்பண்டைத்தான் அவர் சுருக்கு “RP” என்கிறார் என பலரும் இது தொடர்பாக குறிப்பிட்டு வந்தனர். அந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் இது குறித்து ரிஷப் பண்ட் ரியாக்ட் செய்துள்ளார்.
விடுங்கள் சகோதரியே
இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டுள்ள ரிஷ்ப், ‘தலைப்புச் செய்தியில் வரவேண்டுமென்றும், அற்ப புகழுக்காகவும் சிலர் நேர்காணல்களில் பொய்களை அள்ளி வீசுகின்றனர்.
புகழ் தாகத்துக்காக சிலர் இப்படி இருப்பது உண்மையில்வருத்தமாக இருக்கிறது. அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'என்னை தனியாக விடுங்கள் சகோதரியே' எனவும், 'பொய்யுக்கும் ஒரு அளவுண்டு' என்றும் ஹாஸ்டேக் பதிவிட்டுள்ளார்.