தினேஷ் கார்த்திக்கால் தான் தோனிக்கே வாய்ப்பு - ரகசியம் உடைத்த பிரபல வீரர்!
தோனி எவ்வாறு அணிக்குள் வந்தார் என்பது குறித்து சபா கரிம் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
தோனியின் வருகை
முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம், தோனி குறித்து சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில், தோனியை தாம் ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது தான் முதல் முறையாக பார்த்தேன். அப்போது தோனி ஆடிய விதத்தை பார்த்து தான் மிகவும் கவரப்பட்டேன்.
சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தோனி பிரித்து மேய்ந்து விட்டார். விக்கெட் கீப்பராக சில தவறுகளை செய்தார். அவரிடம் சென்று சில அறிவுரைகளை கூறினேன். அவர் இந்திய அணிக்குள் வர கென்யாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடர் தான் காரணம்.
ரகசிய தகவல்
இந்தியா ஏ,பாகிஸ்தான் ஏ, கென்யா ஏ ஆகி அணிகள் பங்கு பெற்ற அந்த தொடரில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியாவுக்காக இந்த தொடரில் விளையாட தினேஷ் கார்த்திக் தான் தேர்வு செய்யப்பட்டார்.
எனினும் தினேஷ் கார்த்திக் அப்போதே இந்திய தேசிய அணியில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வழி இல்லாமல் தோனி அந்த தொடரின் பங்கேற்க வந்தார். அந்தத் தொடரில் தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே பட்டையை கிளப்பி தனது வருகையை கிரிக்கெட் உலகிற்கு அறிவித்தார்.
அவரது வாழ்க்கையில் அது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட விக்கெட் கீப்பர் நிச்சயம் அணிக்கு தேவைப்படுவார் என்று கங்குலியிடம் தான் முறையிட்டதாக தெரிவித்துள்ளார்.