மும்பை அணியின் ஆஃபர்; நான் செஞ்ச பெரிய தப்பு அது - தினேஷ் கார்த்திக் வேதனை!
மும்பை அணியின் ஆஃபரை தவறவிட்டதை எண்ணி தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
முதல் ஐபிஎல் தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார்.
டெல்லி, ஆர்சிபி, கேகேஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் அஸ்வினுக்கு தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், 2 விஷயங்களுக்காக மட்டும் இப்போதும் வருந்துகிறேன்.
அதில் ஒன்று மும்பை அணி கொடுத்த மெகா ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்தேன். என்னை பொறுத்தவரை மும்பை அணியில் நீடித்திருந்தால், நான் இன்னும் நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன். ஏனென்றால் கூக்குபரா பந்தில் பயிற்சி செய்ய முடியும்.
இப்போதும் வருத்தம்..
ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கூக்குபரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள். இன்னொரு விஷயம், சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொரு முறையும் என்னை ஏலத்தில் வாங்க முயற்சிப்பார்கள். அதற்காக என்றும் மரியாதை இருக்கிறது.
ஆனால் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தோனியை வாங்கிய போது, தான் ஐபிஎல் தொடரை புரிந்து கொள்ள முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.