சாப்பிட்டது ரூ.2,700க்கு.. டிப்ஸ் கொடுத்தது ரூ.8 லட்சம் - காரணம் கேட்டு நெகிழ்ந்த ஊழியர்கள்!
வாடிக்கையாளர் ஒருவர் ரூ.8.3 லட்சம் டிப்ஸ் கொடுத்து உணவக ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ரூ.8.3 லட்சம் டிப்ஸ்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மேசன் ஜார் கஃபே எனும் உணவகத்திற்கு மார்க் என்பவர் சென்றுள்ளார். அந்த நபர் அங்கு 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு உணவருந்தியுள்ளார் (இந்திய மதிப்பில் ரூ.2700 ).

பின்னர் 10,000 அமெரிக்க டாலரை டிப்ஸாக (இந்திய மதிப்பில் ரூ. 8.3 லட்சம்) வழங்கியுள்ளார். இதனை பார்த்ததும் உணவாக ஊழியர்கள், இது உண்மைதானா என திகைத்துள்ளனர்.
நண்பனின் நினைவாக
இதுகுறித்து மார்க்கிடம் அந்த ஊழியர்கள் கேட்டபோது, "சமீபத்தில் என் நண்பன் இறந்துவிட்டான். அவன் நினைவாகத்தான் இந்த டிப்ஸ் வழங்கினேன். அவனுடைய இறுதிச்சடங்கிற்கு தான் இந்த நகருக்கு வந்தேன்" என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த டிப்ஸ் பணம் அன்று பணியில் இருந்த 9 ஊழியர்களுக்கு உணவக உரிமையாளர் பிரித்து வழங்கியுள்ளார். மேலும், இந்த நன்றியுணவர்வுக்கு அளவே இல்லை என ஊழியர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    