துப்பட்டாவால் துடிதுடித்த பெண் - ஓடிவந்து மருத்துவர் செய்த செயல்!
துப்பட்டாவால் நடுரோட்டில் பெண் ஒருவர் உயிருக்கு போராடிய சம்பவம் பதைதைக்க வைத்துள்ளது.
மருத்துவர் முதலுதவி
திண்டுக்கல், வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மணிமேகலை. இருவரும் பெரியகுளம்-திண்டுக்கல் சாலையில் பரசுராமபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மணிமேகலையின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த மணிமேகலை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில்,
நெகிழ்ச்சி சம்பவம்
அவ்வழியாக வந்த கோவையைச் சேர்ந்த மருத்துவர் செல்வராஜ் என்பவர் தனது காரை நிறுத்தச்சொல்லி, உடனடியாக ஓடி வந்து சாலையில் மயங்கிக் கிடந்த மணிமேகலைக்கு முதலுதவி அளித்தார்.
அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.