திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து..கொத்தாக மடிந்த உயிர்கள்- எடப்பாடி பழனிசாமி வேதனை!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தீ விபத்து
திண்டுக்கல்லில் -திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று (டிச.12) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சைக்கு உடனிருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை உள்ளே சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.20 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
வேதனை
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.