திக்வேஷ் ரதிக்கு தடை; அபிஷேக் சர்மாவுக்கு கடும் தண்டனை - பிசிசிஐ காட்டம்

Lucknow Super Giants Sunrisers Hyderabad Viral Video IPL 2025
By Sumathi May 20, 2025 07:24 AM GMT
Report

மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் - திக்வேஷ் ரதிக்கு எதிராக பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

அபிஷேக் - திக்வேஷ்

ஹைதராபாத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

digvesh rathi - abhishek sharma

இதன் மூலம் ஐபிஎல் 2025ல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இதில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அதிரடியாக 59 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் திக்வேஷ் ரதியின் பந்துவீச்சில் முடிவுக்கு வந்தது.

ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்? பிசிசிஐ முடிவு!

ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்? பிசிசிஐ முடிவு!

பிசிசிஐ நடவடிக்கை

தொடர்ந்து சர்மா ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோது, திக்வேஷ் ரதி ஒரு புத்தகத்தை எடுத்து, அதில் அபிஷேக் சர்மாவின் பெயரை எழுதுவது போல சைகை செய்தார். இதனால் கோபமடைந்த சர்மா, ரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ அவர்களுக்குத் தண்டனை வழங்கியுள்ளது. திக்வேஷ் ரதிக்கு இது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்றாவது விதிமீறல் என்பதால், அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் ஆடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் சர்மா முதன்முறையாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விதிமீறல் செய்திருக்கிறார். அதனால் அவருக்குப் போட்டி சம்பளத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.