கும்பமேளாவிற்கு நேரில் செல்லாமலே டிஜிட்டல் நீராடல் - இப்படி கூடவா சம்பாதிக்குறாங்க?
கும்பமேளாவில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இளைஞர் டிஜிட்டல் நீராடல் சேவையை வழங்கி வருகிறார்.
கும்பமேளா
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்வு, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதில் தற்போது வரை 50 கோடிக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசல்
கடந்த ஜனவரி 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கும்பமேளா நிகழ்வு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி பயணித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் அதிகளவிலான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி வந்ததில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டு, 300 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெறும் 50 கிமீ தூரத்தை கடக்கவே 10 முதல் 12 மணி நேரம் ஆனது. சில மாவட்டங்களில் உள்ள சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து டிராபிக் பிரச்சனையை குறைத்தனர்.
டிஜிட்டல் நீராடல்
இந்த சூழலில் கும்பமேளாவிற்கு நேரில் செல்ல முடியாதவர்களுக்காக அங்குள்ள இளைஞர் ஒருவர் டிஜிட்டல் நீராடல் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பினால் அதை பிரிண்ட் செய்து கும்ப மேளா நீரில் முக்கி எடுப்பார்.
Digital Kumbh Snan 😭😭 and people are even paying him 👇
— Dhruv Rathee (Parody) (@dhruvrahtee) February 21, 2025
pic.twitter.com/qGBr168p0f
இதற்காக ரூ1,100 கட்டணம் வசூலிக்கிறார். இது தொடர்பானவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது மூடநம்பிக்கை, மோசடி என விமர்சித்து வருகின்றனர்.