டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாக தற்கொலையா? - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்..!

Tamil Nadu Police Death
By Thahir Jul 07, 2023 06:18 AM GMT
Report

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் (DGP) சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

மன அழுத்ததால் தற்கொலை 

அவரின் தற்கொலை சம்பவம் குறித்து பேசுகையில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து, டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார்.

dig vijayakumar committed suicide dgp explain

அவர் கூறுகையில், இன்று காலை 6.45 மணிக்கு நடைப்பயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்துள்ளார் விஜயகுமார்.

பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கிய அவர் காலை 6.50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் குடும்பத்தினர் கோவை சென்று அவருடனே இருந்து அந்துள்ளனர்.

விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும், மன அழுத்தத்தால் கடந்த சில வாரங்களாக சரியாக தூங்கவில்லை என சக பணியாளர்களிடம் தெரிவித்தாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

துணிச்சலான ஒரு அதிகாரியை காவல்துறை இழந்துவிட்டது 

மன அழுத்தத்தை குறைக்க மாத்திரைகளையும் விஜயகுமார் சாப்பிட்டு வந்துள்ளார். மன அழுத்தத்தில் உள்ள விஜயகுமாருக்கு விடுப்பு வழங்கப்பட்டு, உயர் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

dig vijayakumar committed suicide dgp explain

டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல என்றும் உடற்கூறாய்வு முடிந்து இன்று மாலை விஜகுமாரின் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரும்பாக்கம் ஃபெட் வங்கி கொள்கை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களின் மிக துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தவர்.

மிகவும் நேர்மையான மனிதர், துணிச்சல் மிக்க நேர்மையான ஒரு அதிகாரியை காவல்துறை இழந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.