Breaking News | டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு காரணம் என்ன? - வெளியான திடுக்கிடும் தகவல்..!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பாக பணியாற்றியவர்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் திடீரென இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம், கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர் விஜயகுமார்.
இவர் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும் பணியாற்றினர்.தற்போது இவர் கோவை மாவட்ட சரக டிஐஜியாக இருந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை தான் காரணம்?
இன்று காலை 6 .50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று இரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் டிஐஜி கடந்த இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், துாக்கமின்மையால் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
குடும்ப பிரச்சனையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.