இனி வெவ்வேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்யமுடியாது? அரசு விளக்கம்
கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்வது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கலப்பு திருமணம்
சின்னத்திரை மூலம் பிரபலமானவர்கள் நடிகர் அமீர் மற்றும் நடிகை பாவ்னி. இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால்,
தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்றும், திருமணம் செல்லுப்படியாகாது என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
அரசு விளக்கம்
இதனால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,
"இது முற்றிலும் பொய்யான தகவல். இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்துகொள்வதற்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது. அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுபோல் நடைபெறும் திருமணங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.