மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சென்னையில் 3 பேருக்கு பாதிப்பு!
COVID-19
Tamil nadu
Chennai
By Sumathi
சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதன் வீரியம் குறையவில்லை.
3 பேர் பாதிப்பு
இந்நிலையில் சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.