நடுரோட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி - கண்டுகொள்ளாமல் டீசலை பிடித்து சென்ற மக்கள்!
சடலத்தின் நடுவே மக்கள் டீசலை பிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டி மரணம்
திருவண்ணாமலை, சோ நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் டீசல் டேங்க் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

சென்னையிலிருந்து டீசல் டேங்க் லாரியில் 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் லாரியில் முழுவதுமாக டீசல் நிரம்பி கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்து சாலையின் ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு நேரம் என்பதால் வீட்டிற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார்.
தொடர்ந்து அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு டீசல் டேங்கர் லாரியை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலையிலிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தபோது மலப்பாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த
மக்கள் அலட்சியம்
மூதாட்டி கனகாம்பரம் (70) தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்த பொழுது அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்காக வாகனத்தை வேகமாக இயக்கிய பொழுது டேங்கர் லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் எதிர்பாராத விதமாக மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையறிந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பல்வேறு பாத்திரங்களை கொண்டு சாலையில் வழிந்து ஓடிய டீசலை எடுத்துச் சென்றனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.