கட்டுப்பாட்டை இழந்த கார்.. 2பேர் துடிதுடித்து பலி- நள்ளிரவில் நடந்த கோர விபத்து!

Accident Death Krishnagiri
By Vidhya Senthil Oct 31, 2024 11:55 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மகேஷ் . தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் லிங்க்டோ, சின்னஎலசகிரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகிய 3 பேரும்3 பேரும் காரில் பாகலூர் சென்றனர்.

hosur car accident

அப்போது வெங்கடராயபுரம் ஏரிக்கரையில் சென்றுக்கெண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது . அப்போது பாலத்தில் உள்ள தடுப்புகளை இடித்து கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் 3 பேரும் காரிலிருந்து வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கினர்.

இறந்துபோன மகன்..4 நாட்களாக சடலத்துடன் வசித்த பெற்றோர் - உறைய வைக்கும் சம்பவம்!

இறந்துபோன மகன்..4 நாட்களாக சடலத்துடன் வசித்த பெற்றோர் - உறைய வைக்கும் சம்பவம்!

விபத்து

இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் மகேஷ், லிங்க்டோ ஆகிய 2 பேரைக் காருடன் சடலமாக மீட்டனர்.

hosur car accident

மேலும் நீர் மூழ்கிய யோகேஸ்வரனை நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னர் இன்று காலை சடலமாக மீட்டனர். பின்னர் 3 பேர் உடல்களையும் மீட்ட காவல்துறை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.