இறந்துபோன மகன்..4 நாட்களாக சடலத்துடன் வசித்த பெற்றோர் - உறைய வைக்கும் சம்பவம்!
மகன் இறந்துபோனதுகூட தெரியாமல் பார்வையற்ற பெற்றோர் 4 நாட்கள் அவருடன் தங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பிளைண்ட்ஸ் காலணியைச் சேர்ந்தவர் கலுவா ரமணா - சாந்தி குமாரி தம்பதியினர். இவர்களுக்கு பிரதீப் மற்றும் பிரமோத் (30) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரமோத்துக்கு திருமணமாகிய நிலையில் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனித்தனியாக வாழ்வதாகக் கூறப்படுகிறது.மேலும் வயது முதிர்வால் கலுவா ரமணா - சாந்தி குமாரி தம்பதிக்குப் பார்வைக் கோளாறு காரணமாக பிரமோத் அவர்களைக் கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, பிரமோத் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இறந்துபோன மகன்
அப்போது பிரமோத் உறங்கிய நிலையில் இறந்துபோனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருடைய உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ரமணா மற்றும் சாந்தகுமாரி இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். உணவு மற்றும் தண்ணீர் கேட்டு பிரமோத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பிரமோத் குடிக்கு அடிமையானதால், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை.
இதனால் பிரமோத் உறங்கிய நிலையில் இறந்துபோனது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்துவருவதால், அதன்பின்னரே உண்மை தெரியவரக்கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.