பிரபல கோயில் தெப்பக் குளத்தில் 2 ஆண் சடலங்கள் - கொலையா? தற்கொலையா?
கோயில் தெப்பக் குளத்தில் 2 ஆண் சடலங்கள் கிடந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோயில் தெப்பக் குளம்
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாகும். இங்கு வழிப்பட நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணமே இருப்பார்கள்.
இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு சடலங்கள் இன்று காலை மிதந்ததுள்ளது. அதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு பொதுமக்கள் உடனே போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சடலங்கள்
இந்த தகவலறிந்து ம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 30 மற்றும் 50 வயதுடைய இரண்டு பேரின் சடலங்களை குளத்தில் இருந்து மீட்டனிர். இதையடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.