7 கோடிக்கு ஏலம் போன புத்தகம்..இதன் பெயரை கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க! அப்படி என்ன இருக்கு?
கோடிக்கு ஏலம் போன புத்தகம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
7 கோடி புத்தகம்
உலகில் மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்று தான் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. பேய்ப் புத்தகம் என்று அழைக்கப்படும் இந்த புத்தகத்தை வானத்தில் இருந்து பலர் படிப்பதாக நம்பப்படுகிறது.1818ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட இந்த புத்தகம் தற்போது 2024ல் ரூ.7.04 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் எழுதிய இந்த புத்தகம் 1818ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரதி மட்டுமே இருந்தது. மேலும், அந்த புத்தகத்தை ஏலத்தில் விட்டபோது, நம்ப முடியாத தொகைக்கு ஏலம் போனது. இந்த புத்தகத்தை பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லி எழுதியுள்ளார்.
என்ன இருக்கு?
21 வயதில் எழுதப்பட்ட இந்த புத்தகம் மிகவும் பிரபலமானது. ‘Frankenstein: Or, The Modern Prometheus’ என்று பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஃபிராங்கன்ஸ்டைன் என்ற பாத்திரம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த புத்தகத்தின் முதல் பிரதிகளில் 3 இன்னும் இருக்கின்றன. இளஞ்சிவப்பு நிற அட்டை கொண்ட இந்த 3 பிரதிகளில் ஒரு பிரதி மட்டுமே தனியார் சேகரிப்பில் இருந்து தற்போது ஏலத்தில் விடப்பட்டது. மற்ற 2 பிரதிகள் நியூயார்க் பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.