பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்! அதிரடி அறிவிப்பு!

delete school books caste name
By Anupriyamkumaresan Aug 05, 2021 10:13 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்துள்ள நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார்.

பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்! அதிரடி அறிவிப்பு! | School Books Caste Name Delete

இந்நிலையில் தமிழக பாடநூல்களில் தமிழறிஞர்களின் பெயரின் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர், உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது.

அதுபோல அனைத்து தமிழறிஞர்களின் சாதி பெயர்களும் நீக்கியே புத்தகம் இனி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் பாடப்புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயர்களோடு இருந்த சாதிப் பெயர்கள் 2019ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுள்ளன என்று சென்னையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கம் அளித்துள்ளார்.