பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் - நுழைந்தது எப்படி?
பதிவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.
பதவி ஏற்பு விழா
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியானது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பதவியை தக்கவைத்துளார்.
அந்த வகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.அங்கு அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
சிறுத்தை நடமாட்டம்
மேலும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது. இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சையாகியுள்ளது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்று கேள்வி எழுந்துள்ளது.
Can you spot something unusual happening here?
— Ankit Agarwal pitti ?? (Modi ka Parivar) (@officeofpitti) June 10, 2024
An animal, allegedly a leopard, was spotted walking at the Rashtrapati Bhavan.
This happened when MP Durga Das was carrying out official procedures on stage.#officeofpitti pic.twitter.com/040prMaBMG