20 ஆண்டுகளாக மூக்கின் உள்ளே இருந்த Dice - அதிர்ந்த மருத்துவர்கள்
இளைஞரின் மூக்கின் உள்ளே 20 வருடமாக இருந்த பகடைக்காய் அகற்றப்பட்டுள்ளது.
தும்மல் பிரச்சினை
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான்(Xian) ஐச் சேர்ந்த Xiaoma என்ற 23 வயதான இளைஞர் வசித்து வருகிறார்.
இவர் நீண்ட காலமாகவே தும்மல், மூக்கடைப்பு மற்றும் தொடர்ந்து மூக்கில் நீர் வடிதல் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டுவந்துள்ளார்.
பகடைக்காய்
பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, Xian Gaoxin மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளார்.
அங்கு அவருக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் மூச்சுக்குழாயில் ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் வெற்றிகரமாக உள்ளே இருந்த 2cm பகடைக்காயை(Dice) அகற்றினர்.
மேலும் அது நீண்டகாலமாக உள்ளே இருந்தால் மூக்கில் உள்ள திசைகளுடன் நன்றாக ஒட்டியிருந்தது. பகடைக்காயின் ஒரு பகுதி அரிக்கப்பட்டிருந்தது.
20 வருடம்
இது சியாமாவின் 3 அல்லது 4 வயதாக இருக்கும் போது மூக்கின் உள்ளே சென்றிருக்கலாம் என சியாமா நினைவு கூர்ந்தார். ஆனால் எப்படி உள்ளே சென்றது என அவருக்கு நினைவு இல்லை.
20 வருடமாக அவரின் உள்ளே இருந்ததால் இதனால் ஏதாவது அவருக்கு பக்கவிளைவுகள் அல்லது வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அந்தவயதில் சிறிய மூக்கு வழியே பகடைக்காய் எப்படி உள்ளே சென்றிருக்கும் என அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.