சுகர் இருக்கா? அப்போ கண்டிப்பா முருங்கைக்காயை இப்படி சாப்பிட்டு பாருங்க!
முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை நோய்
அன்றாட உணவு முறையில் மாற்றம் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களால் பல பேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.
இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த வேண்டி மருத்துவர்கள் உணவு முறையை மாற்ற பல அறிவுரைகள் அளித்துள்ளார்.
மேலும், இந்த நோயை கட்டுப்படுத்த நம்முடைய உணவில் அல்லது பானங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்ட உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
எனவே, தான் ஆயுர்வேத மருத்துவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.
முருங்கைக்காய்
இதற்கு, சிறந்த உணவாய் விளங்குவது முருங்கைக்காய் தான்,இதில் ஆன்டிவைரல், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு,பாஸ்பரஸ், போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
முருங்கைக்காய், பூ, இலை என மரத்தில் கிடைக்கக்கூடிய அனைத்திலும் பல்வேறு நன்மைகள் உள்ளது. குறிப்பாக, இதில் இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்பது ஆய்வுகளின் முடிவு.
இவற்றில் உள்ள க்ளைகோசைடுகள், கிரிப்டோ குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் 3 ஓ குளுக்கோசைடு ஆகியவற்றால் நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
இப்படி சாப்பிடுங்கள்
முருங்கைக்காயை தினமும் சாப்பிட சலிப்பாக இருந்தால் முருங்கை சூப், முருங்கை பருப்புகூட்டு என்று பல வழியில் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
இருப்பினும், முருங்கையை அதிகளவில் சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய துடிப்பை குறைத்துவிடும். எனவே கவனுத்துடன் முருங்கையை உட்கொள்ளவேண்டும்.
தைராய்ட் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோய் அளவு அதிகம் உள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசித்த பிறகு உட்கொள்ளுங்கள்.
மேலும், ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முருங்கைக்காய்க்கு மேல் சாப்பிடுவதை தவிர்த்துகொள்ளுங்கள்.ஒருவேளை சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.