தப்பித்தவறி கூட சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீங்க...! அலார்ட்
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
ஒரு மனிதனின் கணையத்தில் உற்பத்தியாகும் “இன்சுலின்” ஹார்மோனின் குறைபாட்டால் ஒருவருக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, ஒட்டுமொத்த உடலியக்கத்தை பாதிப்பு ஏற்படுததும் இதைதான் நீரிழிவு நோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று யாரும் உணர வேண்டாம்.
இது நாள் வரை எப்படி இருந்தோமோ அதையெல்லாம் மறந்து விட்டு, இனி வரும் காலங்களில் சரியான உணவை, சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் இந்நோயிலிருந்து விடுபட்டு விடலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகளைப் பற்றி பார்ப்போம் -
பழங்கள்
சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். பானங்கள் சர்க்கரை நோயாளிகள் பெப்சி, மிராண்டா, கோக்கோகோலா போன்ற செயற்கையான பானங்களை குடிக்கக் கூடாது.
கிழங்குகள்
சர்க்கரை நோயாளி உள்ளவர்கள் வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை தவிர்த்து விட வேண்டும்.
இறைச்சி
சர்க்கரை நோயாளி உள்ளவர்கள் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு போன்ற இறைச்சிகளை சாப்பிடக்கூடாது.
பலகாரங்கள்
சர்க்கரை நோயாளி உள்ளவர்கள் இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்தெடுத்த வகைகளை உண்ணக்கூடாது.
சீன உணவுகள்
சர்க்கரை நோயாளிகள் ப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற மசாலா நிறைந்த சீன உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும. இல்லையென்றால் இது ஆபத்தை விளைவித்து விடும்.