தோனி ஓய்வு பெற காரணமே நான் தான்; குழந்தை வேணும்னா.. - மனைவி சாக்ஷி பகீர்!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Apr 10, 2024 04:42 PM GMT
Report

எம்.எஸ். தோனி குறித்து அவரது மனைவி சாக்ஷி தோனி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்ஷி தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

தோனி ஓய்வு பெற காரணமே நான் தான்; குழந்தை வேணும்னா.. - மனைவி சாக்ஷி பகீர்! | Dhonis Wife Sakshis Old Video Goes Viral

கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் எம்.எஸ். தோனி குறித்து அவரது மனைவி சாக்ஷி தோனி பேசும் ஒரு பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி கடந்த 2014-ம் ஆண்டில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். இதுதொடர்பாக அந்த வீடியோவில் சாக்ஷி கூறுகையில் "தோனி ஓய்வு முடிவை எடுக்க போகிறார் என நாங்கள் குறிப்பால் உணர்ந்திருந்தோம். நான் அவரிடம் கூறியது நன்றாக நினைவில் இருக்கிறது.

தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா; யாரும் கேட்கமாட்டிங்களா? முன்னாள் வீரர்கள் அதிருப்தி!

தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா; யாரும் கேட்கமாட்டிங்களா? முன்னாள் வீரர்கள் அதிருப்தி!

அவர் எனக்கு முக்கியம்

நீங்கள் ஒரு குழந்தை வேண்டும் என விரும்பினால், ஏதேனும் ஒரு விளையாட்டு வடிவத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஏனெனில், உங்களுடைய குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாட உங்களுக்கு நேரமே இல்லை என்று கூறியிருந்தேன்.

தோனி ஓய்வு பெற காரணமே நான் தான்; குழந்தை வேணும்னா.. - மனைவி சாக்ஷி பகீர்! | Dhonis Wife Sakshis Old Video Goes Viral

எங்க மகள் ஜிவா பிறந்தபோது, மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரும் உங்களுடைய கணவர் வரவில்லை என்றனர். அதற்கு நான், அது ஒரு விஷயமில்லை என்றேன். அவருக்கு கிரிக்கெட் முக்கியம். எனக்கு அவர் முக்கியம். அதனால், அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ, அதுவே என்னுடைய முன்னுரிமையும் ஆகும் என்றேன்.

அவருடைய மனைவியாக நான் பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும் என மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அதற்கு நான், அப்படியில்லை, அது அனைத்தும் அன்பு என கூறுவேன். நீங்கள் அன்பில் இருக்கும்போது, அதனை நீங்கள் தியாகம் என்று கூற முடியாது" என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.   

You May Like This Video