தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா; யாரும் கேட்கமாட்டிங்களா? முன்னாள் வீரர்கள் அதிருப்தி!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Apr 11, 2024 12:31 PM GMT
Report

எம்.எஸ்.தோனி தவற விட்ட கேட்ச் தொடர்பாக முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் சைமன் டவுல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தவறவிட்ட கேட்ச் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா; யாரும் கேட்கமாட்டிங்களா? முன்னாள் வீரர்கள் அதிருப்தி! | Dhonis Missed Catch Disgruntled Ex Players

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது சென்னை பவுலர் முஸ்தாபிசுர் வீசிய பந்தை கொல்கத்தா வீரர் ரஸல் பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார். அப்போது தன்னை நோக்கி வந்த அந்த கேட்சை சென்னை வீரர் எம்.எஸ். தோனி தவரவிட்டார். ஆனால், கேப்டன் ருதுராஜ் உட்பட யாரும் தோனி மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.

தோனி ஓய்வு பெற காரணமே நான் தான்; குழந்தை வேணும்னா.. - மனைவி சாக்ஷி பகீர்!

தோனி ஓய்வு பெற காரணமே நான் தான்; குழந்தை வேணும்னா.. - மனைவி சாக்ஷி பகீர்!

முன்னாள் வீரர்கள் அதிருப்தி

இந்நிலையில் தோனி தவற விட்ட அந்த கேட்ச் பற்றி ஏன் யாரும் கோபப்படவில்லை? என முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் சைமன் டவுல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா; யாரும் கேட்கமாட்டிங்களா? முன்னாள் வீரர்கள் அதிருப்தி! | Dhonis Missed Catch Disgruntled Ex Players

இதுகுறித்து நேரலையில் பேசிய வாகன், "ஒரு எளிதான கேட்ச்சை எம்.எஸ். தோனி தவற விட்டார். அப்போது கேமரா சிஎஸ்கே அணியின் வீரர்கள் மீது திருப்பப்பட்டது. ஏனெனில் கேட்ச்சை விட்டது தோனி என்பதால் அது பரவாயில்லை என்பதுபோல் அவர்கள் இருந்தனர்" என்றார். அப்போது பேசிய டவுல் "தற்காக யாருமே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அந்த சமயத்தில் தோனி கேட்ச் தவற விட்டதற்காக பவுலர் கோபமான ரியாக்சன் கொடுத்திருந்தால் அதை நான் விரும்பியிருப்பேன்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய வாகன் "அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரகுமான் கோபமடைய சென்றார். இருப்பினும் தோனி என்பதால் கடைசியில் அவர் அமைதியாக சென்று விட்டார்" என்று உரையாடியுள்ளனர்.