சென்னை வந்த டோனிக்கு உற்சாக வரவேற்பு
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதற்காவும் சென்னை வந்த டோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை எடுப்பதற்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு பல முன்னணி வீரர்கள் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்டனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல டோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து சென்னை அணியானது பயிற்சியை வரும் 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil