ஐபிஎல் தொடர்; எப்போதுமே பின்வரிசையில் களமிறங்குவது ஏன்? தோனி கூறும் விளக்கம்!

MS Dhoni Chennai Super Kings IPL 2024
By Swetha Oct 29, 2024 03:15 PM GMT
Report

பேட்டிங்கில் எப்போதுமே பின்வரிசையில் களமிறங்குவது காரணம் குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல்

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெரும்பாலானோர் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஐபிஎல் தொடர்; எப்போதுமே பின்வரிசையில் களமிறங்குவது ஏன்? தோனி கூறும் விளக்கம்! | Dhoni Tells Reason For Playing Last Batting Order

அந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் தோனி பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

எனவே அவர் சற்று சீக்கரமே களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், இது பற்றி தோனி சமீபத்தில் பேசுகையில், என்னுடைய சிந்தனை மிகவும் எளிது.

சிஎஸ்கே நிர்வாகத்தை சந்திக்க மாட்டேன்.. தோனி எடுத்த முடிவு - காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்!

சிஎஸ்கே நிர்வாகத்தை சந்திக்க மாட்டேன்.. தோனி எடுத்த முடிவு - காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்!

தோனி 

அதாவது மற்றவர்கள் அவர்களது வேலையை செய்யும்போது நான் ஏன் மேலே பேட்டிங் செய்ய செல்ல வேண்டும். கடந்த ஐபிஎல் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் சூழ்நிலையில் நடைபெற்றது.

ஐபிஎல் தொடர்; எப்போதுமே பின்வரிசையில் களமிறங்குவது ஏன்? தோனி கூறும் விளக்கம்! | Dhoni Tells Reason For Playing Last Batting Order

எனவே அதில் இடம் பிடிக்க போராடும் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டியிருந்தது. எங்கள் அணியில் துபே, ஜடேஜா அதுபோன்ற வீரர்களாக இருந்தனர். எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக தங்களது திறமையை நிரூபிக்க நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம்.

ஏனெனில் ஓய்வு பெற்ற எனக்கு எதுவும் இல்லை. அதனால் நான் பேட்டிங் வரிசையில் கீழே விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் செய்ததில் அணியும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.