சிஎஸ்கே நிர்வாகத்தை சந்திக்க மாட்டேன்.. தோனி எடுத்த முடிவு - காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்!

MS Dhoni Chennai Super Kings TATA IPL
By Swetha Oct 24, 2024 05:18 AM GMT
Report

வருகின்ற ஐ.பி.எல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சிஎஸ்கே 

2025ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சமீபத்தில் ஏலத்திற்கான விதிகளை பி.சி.சி.ஐ., வெளியிட்டது. அதன்படி, ஒரு அணி வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

சிஎஸ்கே நிர்வாகத்தை சந்திக்க மாட்டேன்.. தோனி எடுத்த முடிவு - காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்! | Dhoni Refused To Meet Csk Management Till 28Th

அதேபோல, ஒரு அணியின் ஏலத் தொகை ரூ.100 கோடியில் இருந்து ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் 31ம் தேதிக்குள் வெளியிடவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதற்கான பணிகளில் அனைத்து அணி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, பதிரானா மற்றும் தோனி ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தோனியை அன்கேப்டு வீரராகவும், ஷிவம் துபேவை ஆர்.டி.எம்., முறையில் தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள தோனி வருகின்ற தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் ஏல விதியில் மாற்றம் - தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவதில் சிக்கலா?

ஐபிஎல் ஏல விதியில் மாற்றம் - தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவதில் சிக்கலா?

தோனி 

இந்த சூழலில், தோனியின் முடிவு குறித்து தங்களிடம் ஏதும் சொல்லவில்லை என சென்னை அணியின் நிர்வாகம் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏலம் தொடர்பாகவும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்,

சிஎஸ்கே நிர்வாகத்தை சந்திக்க மாட்டேன்.. தோனி எடுத்த முடிவு - காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்! | Dhoni Refused To Meet Csk Management Till 28Th

தொடரில் விளையாடுவது குறித்து தோனியை சந்தித்து பேச சி.எஸ்.கே., நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், 28ம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 29 அல்லது 30ம் தேதிகளில் தோனியை சந்தித்து பேச சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த சந்திப்பிற்கு பிறகே, தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என தெரிய வரும். அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் தோனி இம்பேக்ட் வீரராக ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.