திணறும் CSK - இனி அட்வைஸ் கேக்காத!! தோனியின் பிடிவாதம் - தயக்கத்தில் ருதுராஜ்
சென்னை அணி இன்று பலமான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இது வரை 8 போட்டிகளில் (RCB, GT, DC, SRH, KKR, MI , LSG(2 முறை)) விளையாடியுள்ளது.
அதில் 4'இல் வெற்றி(RCB, GT, KKR, MI) 4'இல் தோல்வி(DC, SRH, LSG(2 முறை)) பெற்றுள்ள அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று சென்னை அணி பேட்டிங்கில் பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. Play off சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணிக்கு இனி வரும் ஆட்டங்கள் மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு தோல்வி பெற்றாலும் அது அணியின் வாய்ப்பை சிக்கலாகி விடும். இந்த சூழலில் கடும் நெருக்கடிக்குள் சென்னை அணி இன்று களமிறங்குகிறது. அதே நேரத்தில், கேப்டன் ருதுராஜ் கூடுதல் நெருக்கடியை சந்தித்துள்ளார். இதனை ஆண்டுகளாக தோனி வழிநடத்திய சென்னை அணியை அவர் தற்போது தலைமை தாங்குகிறார்.
ருதுராஜ் தோனி விளையாடும் வரை பெரிய சிக்கலை பார்க்கப்போவதில்லை. ஆனால், தோனி ஓய்வு பெற்ற பிறகே, அழுத்தத்தை காண்பார். தற்போதும் மைதானத்தில் இறுக்கமான நேரங்களில் ருதுராஜிற்கு தோனி அறிவுரை வழங்குவதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஆனால், எப்போதும் இப்படி ஆலோசனை வழக்கமுடியாது என தோனி தெரிவித்திருப்பதாக முன்னாள் csk வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது முக்கியமான ஒரு பவுலிங் மாற்றம் செய்வது குறித்து தோனியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அதற்கு தோனி சம்மதம் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக ருதுராஜிடம், அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் எந்த ஆலோசனையையும் கேட்க வேண்டாம் என்று நேரடியாக தோனி கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது ருதுராஜ் ஒரு கேப்டனாக முன்னேற அவருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில், தலைமை ஏற்ற முதல் சீசனில் Play off சுற்றிற்கு முன்னேறிவிட வேண்டும் என எண்ணமும் அதற்கான பதற்றமும் ருதுராஜிடம் இருப்பதும் சகஜமே.