தொடர் தோல்வி - இவ்வளவு மாற்றமா?? SRH'க்காக தனி பிளான் போடும் ருதுராஜ் - தோனி!!
சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் விளையாடி வருகின்றது. இது வரை சென்னை அணி 8 போட்டிகள் (RCB, GT, DC, SRH, KKR, MI , LSG(2 முறை)) விளையாடி அதில் 4'இல் வெற்றி(RCB, GT, KKR, MI) 4'இல் தோல்வி(DC, SRH, LSG(2 முறை)) பெற்றுள்ளது.
சென்னை அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சில வீரர்கள் தவறுகிறார்கள். பேட்டிங் பவுலிங் என இரண்டிற்கும் இது பொருந்துகிறது. இனி 6 போட்டிகள் மட்டுமே மீதமிருப்பதால் சென்னை அணிக்கு வரும் போட்டிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், வீரர்களின் மாற்றமும் சற்று சிக்கலாக அணிக்கு உள்ளது.
சிறப்பாக பந்துவீசி வரும் முஸ்தபிசுர் ரகுமான் 1-ஆம் தேதி பிறகு தேசிய அணிக்கு திரும்புகிறார்.
அதே நேரத்தில் தீபக் சாஹரின் காயமும் சென்னை அணிக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனால், முஸ்தபிசுர் ரகுமான் இல்லாத நேரத்தில் சாஹரையும் அணியில் இருந்து மாற்றுவது என்பது பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.
பேக்கப் பௌலர்களாக இருக்கும் முகேஷ் சவுதரி, பெரிய தாக்கத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் அண்மையில் அணியில் சேர்ந்துள்ள ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson) ஒரு வாய்ப்பாக உள்ளார். அவர் அணியில் இணைக்கப்பட்டால், அவருக்கு பதிலாக மற்றொரு வெளிநாட்டு வீரர் வெளியேற்றப்படவேண்டும். வரும் 28-ஆம் தேதி சென்னை அணி பேட்டிங்கில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் முஸ்தபிசுர் ரகுமான் விளையாடுவார். அதே நேரத்தில் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் நீடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே மாற்றம் செய்யப்பட்டால் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் இருவரில் ஒருவருக்கு பதிலாக முகேஷ் சவுதரிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.