கான்வே - முஸ்தபிசுர் இல்லை!! அணியில் இணையும் இங்கிலாந்து வீரர்!! CSK'வின் Master Stroke
ஐபிஎல் 2024க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயமடைந்த டெவோன் கான்வேக்கு பதிலாக ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson) சேர்க்கப்பட்டுள்ளார்.
கான்வே இல்லை...
கடந்த இரண்டு சீசன்களில் CSK அணிக்காக விளையாடிய கான்வே, 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 அரை சதங்கள் அடங்கும். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 92 (நாட் அவுட்).
சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கே வரவில்லை. தொடரின் முதல் பாதியில் அவர் இல்லை என்றாலும், இரண்டாவது பாதியில் அவர் அணியுடன் இணைவார் என CSK நிர்வாகம் எதிர்பார்த்தது. அவர் முழுவதுமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தான், அவருக்கு பதிலாக மற்றோர் வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை அணி. இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிச்சர்ட் க்ளீசன்
வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், இது வரை இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், க்ளீசன் 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அணியில் இருந்து முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரகுமான் வெளியேறும் நிலையில், அவருக்கு பதிலாக, ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson) சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பான முடிவே.
இவரை சென்னை அணி ₹50 லட்சத்திற்கு பெற்றுள்ளது. நாளை(வெள்ளிக்கிழமை) ஏக்னா ஸ்டேடியத்தில் சென்னை அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.