சென்னை அணிக்கு அதிர்ச்சி - வெளியேறிய முக்கிய வீரர் - அப்போ பௌலிங் காலியா?

Chennai Super Kings IPL 2024
By Karthick Apr 17, 2024 09:04 PM GMT
Report

சென்னை அணி இது வரை விளையாடிய 6 போட்டிகளில் 4'இல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணி

நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. பேட்டிங், பௌலிங் என அனைத்து தளங்கிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

chennai-super-kings-to-miss-out-important-player

புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் விளையாடி வரும் நிலையில், 6 போட்டிகளில் 4'இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு சென்னை அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார் அணியில் புதியதாக இணைந்துள்ள முஸ்தபிசுர் ரகுமான்.

சென்னைக்கு வந்த அடுத்த சிக்கல்...KKR போட்டியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்..?

சென்னைக்கு வந்த அடுத்த சிக்கல்...KKR போட்டியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்..?

விலகலா..?

பங்களாதேஷ் அணியை சேர்ந்த அவர், 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட் வீழ்த்தி இருக்கின்றார். அவரை பெரிதாக சென்னை அணி நம்பி வருகிறது. ரசிகர்களும் அவர் மீது பெரும் நம்பிக்கையை கொண்டுள்ள சூழலில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

chennai-super-kings-to-miss-out-important-player

அதாவது, மே 3ம் தேதி துவங்கும் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தேசிய அணிக்காக முஸ்தபிசுர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர், தொடரில் இருந்து விலகுகிறார்.