சென்னைக்கு வந்த அடுத்த சிக்கல்...KKR போட்டியில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்..?
இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணி பலமான கொல்காத்தாவை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இந்த ஆண்டு களமிறங்கியுள்ள நடப்பு சாம்பியன் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில்(RCB, GT) வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 போட்டிகளில் (DC, SRH) அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இது CSK ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று KKR அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்க மைதானத்தில் மீண்டும் வெற்றி திரும்பிட தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும்(SRH, RCB, DC) வெற்றி பெற்றுள்ளது KKR அணி. அதிலும் குறிப்பாக கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 272 ரன்களை சேர்த்து 106 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை KKR பதிவு செய்துள்ளது.
2 பந்துவீச்சாளர்கள்
பலமான KKR அணியை வீழ்த்துமா..? என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் 2 முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சைமன் பேசிய போது, பதிரானா கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது பிசியோவின் முடிவை பொறுத்ததுதான் என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் விசா பிரச்சனையின் காரணமாக வங்கதேசம் சென்றுள்ள முக்கிய பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இவர்கள் இருவரும் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவான ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.